|
2012 இல் உலகம் அழியும் ? மீண்டும் கூறுகிறது மாயன்களின் 2வது கல்வெட்டு ஆதாரம்
2012 இல் உலகம் அழியும் ? மீண்டும் கூறுகிறது மாயன்களின் 2வது கல்வெட்டு ஆதாரம்
November 28th, 2011 10:31 AM
2012 இல் ஏதோவொரு வகை பூமியழிவு இடம்பெறுமென புராதன மாயன்கள் எதிர்வுகூறியிருந்ததைக் மெக்சிக்கோவின் அகழ்வாராய்ச்சி நிறுவனம் குறைத்து மதிப்பிட்டிருந்தது.
ஆனால் தெற்கு மெக்சிக்கோவின் பாழடைந்த ஓர் இடத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று காணப்பட்ட ஒரு கல்வெட்டுத் துண்டொன்றில் இரண்டாவது முறையாகவும் இந்தத் திகதி காணப்பட்டமை இந்த எதிர்வுகூறல் உண்மையா என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான நிபுணர்கள் மாயன் கல்வெட்டின் எழுத்து வடிவங்களில் ஒரேயொரு குறிப்பை மட்டுமே முன்பு கண்டுபிடித்திருந்தனர். இது Tabasco என்ற வளைகுடாப் பகுதியில் உள்ள Tortuguero என்ற இடத்தில் காணப்பட்டது.
இந்தக் கூற்றினை ஒத்த இன்னொரு கூற்றும் Comalcalco அழிவுக்கருகிலிருந்த இன்னொரு செங்கல் கல்வெட்டிலும் காணப்பட்டமை உண்மைதான் என தேசிய மனிதவியல் மற்றும் வரலாற்று அமைப்புத் தெரிவித்திருந்தது.
முதல் குறிப்பானது ஒரு வருடத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு அப்போதிலிருந்து ஆராயப்பட்டு வருகின்றது.
இதுபோலவே இரண்டாவது குறிப்புப் பற்றியும் இணையத்தள ஒன்றுகூடல்களில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அறியப்படுகின்றது.
இதில் டிசம்பர் 21, 2012 அல்லது டிசம்பர் 23, 2012 என்ற திகதிகளில் ஒன்றில் உலகம் அழியலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதைப் பற்றிய செய்தியைப் பலர் இன்னமும் சந்தேகத்துடன்தான் பார்க்கின்றனர்.
சிலர் இதனை வேறொன்றைக் குறிப்பதற்காக எழுதியிருக்கலாம் எனக் கூறுகின்றனர். எனினும் தம்மாலும் இதனை நம்பமுடியாமல்தான் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தச் செங்கல்லில் குறிப்பிட்ட திகதியானது 13வது Baktun இன் முடிவாகும். Baktun என்பது மாயன்களின் முறையில் 394 ஆண்டுக்காலமாகும். அதிலும் 13வது இலக்கம் மாயன்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க புனிதமான இலக்கமாகும்.
மாயன்களின் நீண்டகால எண்ணிக்கை நாட்காட்டி கி.மு.3114ம் ஆண்டில் ஆரம்பிக்கின்றது. அத்துடன் 13வது Baktun உம் டிசம்பர் 21, 2012 அளவில்தான் முடிவடைகின்றது.
ஆனால், இந்தத் திகதியே கடந்தகாலங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
இது ஏதோவொரு முக்கிய வரலாற்று நிகழ்வினைக் குறிப்பிட விளக்கப்பட்டிருக்கலாமென்றும் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் இவ்விரு கல்வெட்டுக்களுமே 1300 வருடங்களுக்கு முந்தையவையாகவும் இரண்டுமே ஏதோவொரு வகையில் புதிரானவையாகவும் காணப்பட்டன.
போர் மற்றும் படைத்தலுடன் தொடர்புடைய மாயன்களின் Bolon Yokte என்ற கடவுளுடன் தொடர்புடையதாக 2012 இல் நடக்கவுள்ள ஏதோ ஒன்றை Tortuguero கல்வெட்டுக் குறிக்கலாமென நம்பப்படுகின்றது.
எனினும், அரிப்பும் அக்கல்லில் ஏற்பட்ட வெடிப்பும் சேர்ந்து அவ்வாக்கியத்தின் முடிவினை வாசிக்க முடியாமல் செய்துள்ளன. இதனைச் சிலர் அவர் வானிலிருந்து கீழிறங்குவார் என்று முடிகின்றதென வாசித்தனர்.
நீண்டகாலமாகவே மாயன் நாட்காட்டிகளிலுள்ள டிசம்பர் 2012 இல் உலக அழிவு ஏற்படும் அல்லது உலகினை மாற்றும் நிகழ்வு ஏற்படலாம் என்ற வதந்திகள் மேற்கத்தேயர்களின் பிழையான விளங்கிக்கொள்ளல்கள் என்றே கூறப்பட்டு வந்தது.
மாயன்களைப் போன்ற புராதன நாகரிகங்களின் பார்வையினை மேற்கத்தேய தீர்க்கதரிசன எண்ணங்கள் திரிபுபடுத்திவிட்டன என இந்த அகழ்வாராட்சி நிறுவனம் கருத்துத் தெரிவித்திருந்தது.
இந்த நிறுவனத்தின் நிபுணர்கள் மேலும் கூறுகையில்,
மாயன்கள் தமது நேரங்களை ஒரு சுற்றுவட்டங்களாகவே பயன்படுத்தினர். ஒழுங்குமுறையில் ஆரம்பித்து முடிவடைவனவாகப் பயன்படுத்தினர். இதன் எந்தவொரு முடிவிலும் உலக அழிவு இடம்பெறவில்லை என்று தெரிவித்தனர்.
இணையத்தில் ஏற்பட்ட 2012 இல் அழிவு என்ற வதந்திகள் பற்றி ஆராய்வதற்கு இந்நிறுவனத்தினால் அடுத்த வாரம் தெற்கு மெக்சிக்கோவில் மாயன் நாகரிகம் பற்றியறிந்த 60 நிபுணர்களுடன் ஒரு சிறப்பு மாநாடொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாயன்களின் நீண்டகாலக் கணக்கிடும் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்ட ஒரு யுகம் முடிந்து இன்னொரு யுகம் ஆரம்பமாகின்றது என்பது பற்றிய சந்தேகங்கள் இல்லாமல் சிதறடிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
|